திரைப்படங்களுக்கு இசையமைக்க தீவிர முயற்சி எடுத்துவருகிறார் ஆண்ட்ரியா. இதையடுத்து நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தாலும் அவர் ஏற்பதில்லையாம்.
மிகவும் வித்தியாசமான கதை, கதைக்களங்கள் என்றால் மட்டுமே ஒப்புக்கொள்வது என்ற முடிவில் உள்ளார்.
மேலும், ‘தனியாக வெளிநாடுகளில் கச்சேரி நடத்தலாமா?’ என்கிற தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ள ஆண்ட்ரியா, அந்த மாதிரி கச்சேரிகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதைக் கண்கூடாகத் தெரிந்துகொள்வதற்காகவே, வெளிநாடுகளில் இசையமைப்பாளர்கள் நடத்தும் எல்லா இசைநிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்று வருகிறார்.

