பிணை கோரி நடிகை கஸ்தூரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

1 mins read
5fba1caf-51c5-4712-923e-0c4a0d8ecf57
ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் வைத்து கஸ்தூரி கைது செய்யப்பட்டார். - படம்: ஊடகம்

சென்னை: நடிகை கஸ்தூரிக்கு பிணை வழங்கக் கோரி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் பிரபாகரன், முறையாக அழைப்பாணை அனுப்பப்படாமல் கஸ்தூரி கைது செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

சென்னையில் உள்ள கஸ்தூரியின் வீட்டில் அழைப்பாணையை ஒட்டிவிட்டு ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

மேலும், முறையாக வழக்கு விசாரணைக்கு அழைக்காமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் வழக்கறிஞர் பிரபாகரன்.

“ஏற்கெனவே அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு பிணை கிடைத்துள்ள நிலையில், அந்த வழக்குகளை எல்லாம் பிணை மனுவில் மேற்கோள் காட்டியுள்ளதால் கஸ்தூரி மீதான வழக்கு தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளது,” என்றார் அவர்.

அவர் தன் மகனுடன் பேச அனுமதிக்க வேண்டும் எனச் சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் முதல் நாள் இரவு சிறையில் தூக்கம் வராமல் கஸ்தூரி அவதிப்பட்டார் என்றும் உணவருந்தவில்லை என்றும் சிறை வட்டாரத் தகவல் தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்