https://www.dailythanthi.com/news/tamilnadu/2-arrested-for-illegally-selling-liquor-in-thoothukudi-128-liquor-bottles-seized-1185623
தூத்துக்குடி: தமிழகத்தில் தூத்துக்குடி தெற்குக் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு, கண்காணிப்பு நிலையத்தை சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சனிக்கிழமை (அக்டோபர் 18) திறந்து வைத்தார்.
குற்றங்களைத் தடுத்தல், குற்றங்களை விரைவில் கண்டுபிடித்தல் போன்ற பணிகளில் பொதுமக்களின் நலன் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கவும் குற்றங்களைத் திறம்படக் கண்டுபிடிக்க உதவும் பணிகளை திறம்பட மேற்கொள்வது, சாலைகளில் தானியக்க வாகனங்களின் எண்களைப் பதிவு செய்யும் கேமராப் பதிவுகளை நவீன முறையில் கண்காணிப்பது போன்ற பணிகள் கட்டுப்பாட்டு, கண்காணிப்பு நிலையத்தில் மேற்கொள்ளலாம்.
அந்தக் கண்காணிப்பு கேமராக்களில் 430 கேமராக்கள் சனிக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தன. இதர கண்காணிப்பு கேமராக்களும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தந்தி ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நிலையத்தில் இடம்பெறும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் மிகத் துல்லியமாகக் காணொளிகளையும் படங்களையும் பதிவுசெய்யும் ஆற்றல் கொண்டவை.
பல்வேறு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் தூத்துக்குடி நகர்ப் பகுதி முழுவதும் காவல்துறையின் முழு கண்காணிப்பில் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.