புதுவை: புதுவையில் இருந்து மீண்டும் விமானச் சேவை தொடங்க இருப்பதாகவும் இண்டிகோ விமான நிறுவனம் புதுவையில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு விமானங்களை இயக்க உள்ளதாகவும் புதுவை விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுவை விமான நிலையம் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கு விமானங்கள் இயக்குவதை கடந்த மார்ச் 30ஆம் தேதியுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நிறுத்திவிட்டது.
கடந்த ஏழு மாதங்களாக விமானங்கள் ஏதும் இயக்கப்படாத நிலையில், புதுச்சேரியில் இருந்து இண்டிகோ நிறுவனம் விமானச் சேவைகளை அளிக்க முன்வந்துள்ளது.
இது தொடர்பாக புதுவை அரசுடன் அந்நிறுவனம் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

