தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராமேசுவரத்தில் விமான நிலையம்; பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகள் வேகம் பெறும்

1 mins read
8fc5cd33-ac51-4ac7-bfce-c4534a9e7a88
வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஏராளமானோர் மதுரை அல்லது துாத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலைவழி ராமேசுவரம் சென்று திரும்புகிறார்கள். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பு இடம்பெற்றது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சி காணும் என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேசுவரத்துக்கு உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஆன்மிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது ராமேசுவரத்துக்கு ரயில், சாலைப்போக்குவரத்து வசதிகள் மட்டுமே உள்ளன.

வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஏராளமானோர் மதுரை அல்லது துாத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலைவழி ராமேசுவரம் சென்று திரும்புகிறார்கள்.

இதனால் கூடுதல் பணம் செலவாகிறது என்பதுடன் பயண நேரமும் அதிகரிப்பதால் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் சலிப்படைகிறார்கள்.

இந்நிலையில், ராமேசுவரத்தில் விமான நிலையம் அமைக்கப்படுவது அனைத்துத் தரப்பினருக்கும் பேருதவியாக இருக்கும் எனப் பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.

இதற்கிடையே, சென்னைக்கு அருகே அமைய உள்ள பரந்தூர் விமான நிலையப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

பரந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் நிலத்தைக் கையகப்படுத்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அத்திட்டப் பணிகள் வேகம் பெறும் என தமிழக அரசு அறிவித்திருப்பது விமான நிலையத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்