தமிழகத்துக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து கிடைக்கும்: மோடி

தமிழகத்துக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து கிடைக்கும்: மோடி

படம்: இந்து தமிழ் திசை

12 Oct 2026 - 6:23 pm

3 mins read

சென்னை: பு​திய சிகரங்​களைத் தொடும் தமி​ழ​கத்தை உரு​வாக்க மத்​திய அரசின் அனைத்து உதவி​களும் கிடைக்​கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்​துள்ளார்.

ரூ.13,000 கோடி​யில் பல்​வேறு திட்​டங்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ள அக்டோபர் 11ஆம் தேதியானது தமிழகத்துக்கும் நாட்டுக்கும் சரித்​திர முக்​கி​யத்​து​வம் வாய்ந்த நாள் என்று குறிப்பிட்டார்.

நிறை​வேற்​றப்​பட்ட திட்​டங்​கள் பலவும் நாட்டு மக்​களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இந்திய மக்களுக்கு நவராத்​திரி நல்​வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொண்டார்.

"அரசுகள் மாறிக் கொண்​டிருந்​தன. ஆனால், தமி​ழ​கத்​தின் வளர்ச்​சி​யும் இங்​கிருக்​கும் மக்​களுக்​குச் சேவை புரி​யும் எனது மன உறு​தி​யும் எப்​போதும் தொடர்ந்​தது. இதே உறு​திப்​பாட்​டுடன் முதல்​வர் விஜய் உடன் இணைந்து தமி​ழ​கத்​தின் வளர்ச்சிப் பயணத்தை முன்​னெடுத்​துச் சென்று கொண்​டிருக்​கிறேன், என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமி​ழ​கத்​தில் ஏராள​மான சாலை, ரயில் திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளன என்றும் அத்திட்டங்கள் தமி​ழ​கத்​தின் வளர்ச்​சிக்கு மிக​வும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக இருக்​கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தாம் குஜராத் முதல்​வ​ராக இருந்தபோது தமிழக முன்​னாள் முதல்​வர்​கள் மு.கருணாநி​தி, ஜெயலலிதா ஆகி​யோ​ருடன் உரை​யாடும் வாய்ப்பு கிடைத்​ததாக நினைவுகூர்ந்த திரு மோடி, பிரதம​ரான பிறகு ஜெயலலி​தா, ஓ.பன்​னீர்​செல்​வம், பழனி​சாமி, மு.க.ஸ்​டா​லின் போன்ற தலை​வர்​களு​டன் இணைந்து பணி​யாற்​றும் வாய்ப்பு தமக்குக் கிடைத்​ததாகக் குறிப்பிட்டார்.

தற்போது தமிழக முதல்வர் விஜய்யுடன் இணைந்து தமிழக முன்னேற்றத்துக்குப் பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார்.

“புதிய சிகரங்​களைத் தொடும் தமி​ழ​கத்தை உரு​வாக்க மத்​திய அரசிடம் இருந்து தேவை​யான உதவி​கள் அனைத்​தும் கிடைக்​கும்.

“தமிழக மக்​களின் உழைப்பு தேசத்​தின் எதிர்​காலத்​துக்கு வலுசேர்க்க பெரும் பங்​காற்ற வேண்​டும். வளர்ச்சி அடைந்த தமி​ழ​கத்​தில் இருந்து வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் உறு​திப்​பாட்டை மெய்​யாக்​கு​வோம்,” என்றார் பிரதமர் மோடி.

கல்வி நிதி: விஜய் வலியுறுத்து

தமிழகத்​துக்கு இந்திய அரசு தரவேண்​டிய கல்வி நிதி ரூ.5,110 கோடியை எந்​த​வித நிபந்​தனை​யும் இன்றி விடுவிக்க வேண்​டும் என்று பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்​வர் விஜய் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

தமிழகத்​தில் மத்​திய அரசு சார்​பில் ரூ.13 ஆயிரம் கோடி​யில் புதிய திட்​டங்​களுக்கு அடிக்கல் நாட்​டு​தல், நிறைவடைந்த திட்​டங்களைத் திறந்​து வைக்கும் விழா சென்னை ஐஐடி வளாகத்​தில் நடை​பெற்​றது.

அப்​போது, பிரதமர் மோடி முன்​னிலை​யில் பேசிய திரு விஜய், மத்​திய, மாநில அரசுகள் இணைந்து செயல்​படும்​போது அதன் பலன் நேரடி​யாக மக்​களின் வாழ்க்​கை​யில் பிர​திபலிக்க வேண்​டும் என்​பதே தமது அரசின் நோக்கம் என்றார்.

தமிழகத்​தில் வளர்ச்​சி​யின் பயன் சென்​னையைத் தாண்டி மாநிலத்​தின் அனைத்து மாவட்​டங்​களுக்​கும் சென்​றடைய வேண்​டும் என்ற நோக்​கில் செயல்​படுவதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்​தில் மேற்​கு, தெற்​குப் பகு​தி​களின் பொருளியல் வளர்ச்​சிக்கு உதவும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்​டம் குறித்து மறு​பரிசீலனை செய்ய வேண்​டும் என வலியுறுத்தினார்.

இரு மாநிலங்​களின் நலனுக்​காக, தமிழகத்​தில் உள்ள ஓசூரில் இருந்து கர்​நாட​கா​வில் உள்ள பொம்​மசந்​திரா வரை மாநிலங்​களுக்கு இடையே​யான மெட்ரோ ரயில் திட்​டத்​துக்கு ஒப்​புதல் வழங்க வேண்​டும் என்றும் திரு விஜய் கேட்டுக்கொண்டார்.

கோதாவரி-​கா​விரி இணைப்​புத் திட்​டத்தை தேசி​யத் திட்​ட​மாகச் செயல்​படுத்த வேண்​டும், சென்னை உயர் நீதி​மன்ற நடவடிக்​கை​களில் தமிழை முதன்மை மொழி​யாகப் பயன்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என மேலும் சில கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.

குறிப்புச் சொற்கள்