தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மது ஒழிப்பு மாநாட்டில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைய வேண்டும்’

1 mins read
c6f68345-fac9-4664-9110-7f2670e18c69
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படவிருக்கிறது என்று அந்த மாநாட்டில் லட்சக் கணக்கான மகளிரை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சி என்கிற வரம்பைக் கடந்து அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் ஜனநாயக அடிப்படையில் பங்கேற்க வேண்டும் என்று திருமா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மதுவை ஒழிக்க மகளிரின் குரல் ஒலிக்க வேண்டுமென்பதால் மதுபோதை ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம். கட்சி, அரசியல் என்பது வேறு சமூகம் மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேறு. மதுவை ஒழிக்க அனைவரும் எங்களுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியுள்ளது. தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ளபோது படிப்படியாக ஏன் தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டு வர இயலாது. இந்தித் திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவற்றில் தமிழகம் முதன்மையாக இருக்கும்போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையானதாக இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுவிலக்குக் கோரிக்கையைத் திமுக அரசு கனிவோடு பரிசீலனை செய்ய வேண்டும். தேர்தல் அறிக்கையில் திமுக உறுதியளித்தபடி மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும் என்று திருமா வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்