தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய்யுடன் கூட்டணி சேரலாம், சேராமலும் போகலாம்: திருமா

1 mins read
701c2864-41a3-402b-bbae-bfbca9d6b65d
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். - படம்: ஊடகம்

சென்னை: விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “கூட்டணி வைக்கலாம், வைக்காமலும் போகலாம். இன்னும் அதுகுறித்து முழுமையாகத் தெரியாது,” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்து உள்ளார்.

அத்துடன், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது தங்களது கொள்கை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தொல் திருமாவளவன் சென்னையில் செவ்வாய்க்கிழமை அன்று (டிசம்பர் 10) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, விஜய் கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குத் தெரியாது என்று பதிலளித்த திருமாவளவன், விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

முன்னதாக, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் ஒரே மேடையைப் பகிர்ந்து கொள்வதை திருமாவளவன் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், விஜய்யுடன் மேடையேறினால் தேவையில்லாத சலசலப்புகள் ஏற்படும் என்பதால் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததாக திருமாவளவன் கூறினார்.

அதேநேரத்தில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்ட ஆதவ் அர்ஜுனா, விசிகவில் இருந்து ஆறு மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்