சென்னை: மத்திய வரவு, செலவு அறிக்கையில், சென்னையில் நடைபெறும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,445.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) வாயிலாகத் தெரியவந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் இத்தகவலைக் கோரியிருந்தார். சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.