தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தஹாவூர் ராணாவை நாடு கடத்தியது அமெரிக்கா

1 mins read
3cd37bac-7347-439f-9f69-43a1b96e51b8
166 பேரைப் பலிகொண்ட மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தஹாவூர் ராணா, - படம்: ஊடகம்

புதுடெல்லி: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது 63 வயதாகும் தஹாவூர் ராணாவை கடந்த 2009ஆம் ஆண்டு எப்.பி.ஐ. அதிகாரிகள் சிகாகோவில் கைது செய்தனர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தஹாவூர் ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இதற்கிடையில், தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக் கோரி, கலிபோர்னியா மற்றும் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றங்களில் தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்க உயர்நீதிமன்றம் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்