புதுடெல்லி: கோவை மாவட்டத்துக்கு வரும் 25ஆம் தேதி மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தரவுள்ளார். அங்கு கட்டப்பட்டு உள்ள பாஜகவின் புதிய இரண்டு மாடி கட்டடத்தை அவர் திறந்து வைக்க உள்ளார்.
அங்கு நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அமரும் வகையில் ஒரு கூட்டு அரங்கமும் சிறிய அளவில் மற்றொரு கூட்டு அரங்கமும், மாவட்டத் தலைவர், நிர்வாகிகள் அரை என தனியாகவும் அமைக்கப்பட்டு உள்ளது.
அமித்ஷாவை வரவேற்பதற்காக கோவை மாவட்ட பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
பிப்ரவரி 26ஆம் தேதி காலை பீளமேடு அருகே எல்லை தோட்டம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கோவை மாநகர் பாஜக தலைமை அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, அங்கு திரளும் பாஜகவினர் மத்தியில் அமைச்சர் உரையாற்ற உள்ளதாகவும் தெரிகிறது.
இதற்காக அங்கு சிறிய அளவில் மேடை மற்றும் பந்தலும் அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.

