வாயுக் கசிவு: இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டவர் ஆந்திராவில் உயிருடன் உள்ளார்

வாயுக் கசிவு: இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டவர் ஆந்திராவில் உயிருடன் உள்ளார்

1 mins read
0d6753f9-2949-4af5-b402-6a858bbad408
வாயுக்கசிவு ஏற்பட்ட திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஊழியர்களின் அறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. - படம்: பிடிஐ
Google News Preferred Icon

சென்னை: அமோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வாயுச்கசிவால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

வாயுக்கசிவு ஏற்பட்ட திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியரில் சிலர் போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஏழு பேர் ஒடிசாவும் இருவர் அசாம் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், வாயுக்கசிவால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பூர்ணிமா ஜுவாங்கா என்ற அந்தப் பெண் ஒடிசாவைச் சேர்ந்தவர். தற்போது உயிருடன் உள்ளார். அவர் ஆந்திராவில் பணிபுரிந்து வருகிறார்‌. திருவள்ளூர் தொழிற்சாலையில் பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை அவருடையது அன்று. ஸ்ரீகாந்த் ஜுவாங்கா என்ற இடைத்தரகர் ஆதார் அட்டைகளை வைத்து ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்