சென்னை: தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள்தான். எல்லா நாளும் வணங்குவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என அக்கட்சியில் தனக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
அண்மையில், ராமதாஸ் அளித்த பேட்டி ஒன்றில், தனது மூச்சுக்காற்று அடங்கும் வரை பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்கமாட்டேன்,” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தந்தையர் தியாக தீபங்கள் எனக் குறிப்பிட்டு அனைத்துலக தந்தையர் தினத்தன்று அன்புமணி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது.
“என் மீது ஏதாவது கோபம் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது பெரிதல்ல,’‘ என்று நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது அன்புமணி கூறினார்.