சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திங்கட்கிழமை (அக்டோபர் 6) காலை சந்திக்க அன்புமணி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அங்கு தந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, “இன்று காலை அப்பாவிற்கு ‘ஆஞ்சியோகிராம்’ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இதயக் குழாய்களில் எந்த அடைப்பும் இல்லை என தெரியவந்துள்ளது
“அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளதாக இதய சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் 6 மணி நேரம் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டும் என்பதால் அவரை யாரும் தற்பொழுது சந்திக்க வேண்டாம்,” என்று கூறினார்.