தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

141 பொறி​யியல் கல்​லூரி​களுக்கு அண்ணா பல்​கலைக்கழகம் நோட்டீஸ்

1 mins read
84379379-bc43-4edc-bdfa-b4b1818fa0e2
கோப்புப் படம் - ஊடகம்

சென்னை: முழு​மை​யான வசதி​கள் இல்​லாத​தால் 141 பொறி​யியல் கல்​லூரி​களுக்கு அது குறித்து விளக்​கம் கேட்டு அண்ணா பல்கலைக்​கழகம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ள​தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் 460க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன.

இந்தக் கல்​லூரி​கள் ஆண்​டுதோறும் தங்​களின் இணைப்பு அங்​கீ​காரத்தை அகில இந்​திய தொழில்​நுட்ப கல்விக் குழு​மம் (ஏஐசிடிஇ), அண்ணா பல்​கலைக்​கழகத்​திடம் புதுப்​பித்​துக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில், நடப்பு கல்​வி​யாண்டில் (2025-26), அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்​யாத கல்​லூரி​களுக்கு விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ள​து.

இதுகுறித்து அண்ணா பல்​கலைக்​கழக அதி​காரி​கள் சிலர் கூறும்​போது, “141 கல்லூரிகளில் பேராசிரியர் பற்​றாக்​குறை, நூல​கங்​கள், ஆய்​வகங்​களில் குறை​பாடு என பல்​வேறு வசதிகளும் முழு​மை​யாக இல்​லை. தங்களது பிரச்சினைகளை 45 நாள்​களுக்​குள் கல்லூரிகள் சரி செய்துவிட வேண்​டும். அதைத்தொடர்ந்து நேரில் ஆய்வு செய்த பின்​னரே இணைப்பு அங்​கீ​காரம் உறுதி செய்யப்படும்,” என்​றனர்.

இதனிடையே, பொறி​யியல் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்வு தொடங்கியுள்ள சூழலில், அண்ணா பல்​கலைக்கழகத்தின் நடவடிக்​கை​யால் மாணவர்​கள், பெற்​றோர்​ கவலை​யில் ஆழ்ந்​துள்​ளனர்.

குறிப்புச் சொற்கள்