சமயக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்கு

1 mins read
89d5410c-432e-4c49-a3bb-beb7b3a10a0a
பாஜக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, மாநிலத் தலைவர் அண்ணாமலை. - படங்கள்: தமிழக ஊடகம்

சென்னை: சமயக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக தமிழக பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் சேலம் நகரக் காவல்துறை ஆணையர் பிரவீன்குமார் அபினபுவைச் சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அதில், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் [Ϟ]எச்.ராஜா ஆகியோர் மதுரை திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறியுள்ளனர்.

“மேலும், அங்கிருக்கும் தர்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இதுதொடர்பாக 1931ஆம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது எனவும் பேசி உள்ளனர்.

“எனவே சமயக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறி இருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த மாநகர இணையக் குற்றக் காவல்துறையினருக்கு காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து இணையக் குற்றக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதையடுத்து, சமயக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது உள்பட மூன்று பிரிவுகளின்கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்