திருப்பூர்: திருப்பூரில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை (டிசம்பர் 18) கைது செய்யப்பட்டார்.
திருப்பூர், சின்னகாளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் அங்கு குப்பையை தரம் பிரித்துக் கொட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதைத்தொடர்ந்து லாரிகளில் குப்பை ஏற்றப்பட்டு சின்னக்காளிபாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுசெல்லப்பட்டது. அங்கு கிராம மக்கள் திரண்டு லாரிகளைச் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
போராட்டத்தில் சாணிப் பவுடருடன் பங்கேற்ற பெண் ஒருவரை காவல்துறை அப்புறப்படுத்திது.
அவா்களைக் காவல்துறை சமரசம் செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் சிலா் காயமடைந்தனர்.
இதையடுத்து அண்ணாமலை உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு தனியார் மண்டத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

