திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் அமரன் படம் திரையிடப்பட்டிருந்தது.
அங்கு பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவத்தில் கைதானவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் சனிக்கிழமை (டிசம்பர் 28ஆம் தேதி) காலை தீவிரவாத நடவடிக்கைகளை விசாரிக்கும் சிறப்புக் காவல் பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலப்பாளைய அலங்கார் திரையரங்கம் மீது கடந்த நவம்பர் 16ஆம் தேதி அதிகாலையில் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை, கட்டட சேதமும் இல்லை என்று கூறப்படுகிறது. எனினும் குண்டுவீச்சு அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் தொடர்புடையவர்களைக் குறித்து மாநகர காவல் துறை ஆணையர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர், பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு புகைப்படக் காட்சிகளில் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு 10 பேர் விசாரிக்கப்பட்டதில் இருவர் கைதாகினர்.
இதைத் தொடர்ந்து கைதானவர்களின் வீடுகளில் சனிக்கிழமை காலை பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். கைதான இருவரான முகமது யூசுப் ரசின், முகமது புகாரி (29) ஆகியோர் தங்கியிருந்த வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

