அரசியலில் எதுவும் நடக்கலாம்: பாமக நிறுவனர் ராமதாஸ்

2 mins read
bf137a4c-d84a-49ff-b6e1-b1876f95f63d
பாமக நிறுவனர் ராமதாஸ். - படம்: இந்து தமிழ் திசை

திண்டிவனம்: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) விருப்ப வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “ஆட்சியில் பங்கு வேண்டாம் என நிபந்தனை அற்ற ஆதரவை கருணாநிதிக்குக் கொடுத்தோம். காங்கிரஸ்காரர்கள் ஆட்சியில் பங்கு கேட்டனர். ஆனால் ஆட்சியில் பங்கு இல்லாமல் ஐந்து ஆண்டுகள் முழுமையாகக் கருணாநிதி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தோம். நான் சொன்னால் ஏன், எதற்கு என்று தட்டாமல் இருக்கும் தலைவரை நான் உடன் வைத்திருக்கிறேன். பா.ம.க. என்பது என் தலைமையிலான ஒரே அணிதான்.

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது. கட்சியைக் கைப்பற்றுவது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் எல்லாவிதமான முயற்சிகளும் எடுத்து வருகிறோம். வெற்றியும் பெறுவோம்,” என்றார் ராமதாஸ்.

திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் நீங்கள் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்குப் பாமக நிறுவனர் ராமதாஸ், “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்,” என தெரிவித்துள்ளார்.

நீங்கள் தான் பா.ம.க.வின் முகம் என்கிறீர்கள். ஆனால் உங்களை மீறி எடப்பாடி பழனிசாமி அன்புமணிக்கு ஆதரவளித்தது ஏன் என்று கேட்கப்பட்டதற்கு, “எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் என்றார்.

நிகழ்ச்சியில் பா.ம.க. தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட 27 பேர் விருப்ப மனு தாக்கல் அளித்துள்ளனர். அதேபோல் டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீகாந்திமதி போட்டியிட 100க்கும் மேல் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்