தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை

1 mins read
fb48aa6c-2355-4539-8f7e-fbb6884853b0
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். படம்: இணையம் -

சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக 47 பெரிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தப்படி, சென்னை திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில், விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

மேலும், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, சன்னிதி தெருவில் உள்ள இறைச்சி கடைகள் அகற்றப்படும்.

அதோடு தமிழகத்தில் உள்ள கோயில்களில், விரைவில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

அதற்காக, 47 கோயில்களை தேர்வு செய்து, 'அன்னை தமிழில் அர்ச்சனை' என, விளம்பர பலகைகள் வைக்கப்படும்.

அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும்.

முதற்கட்டமாக, வரும் வாரத்தில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட உள்ளது.

இதை தொடர்ந்து மற்ற பெரிய கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, பின்னர் சிறிய கோயில்களுக்கு பகுதி வாரியாக விரிவாக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.