மதுரை: மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் எல்லா மாநிலங்களிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் அதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து உத்தரவிடவேண்டும் என்றுமூ கூறப்பட்டுள்ளது. மனு விசாரணையின்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணமாகும். ஆனால், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்கக் கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரை மணிநேரமாகிறது. சுங்கச்சாவடிகளில் வீண் தாமதத்தைத் தடுக்க வேறு வழியில்லையா?” எனக் கேள்வி எழுப்பியது.
அத்துடன், இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மாலை மலர் ஊடகம் தெரிவித்தது.