தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய சம்பவம் செந்தில் விரைவில் கைதாவார்: ஆணையர் அருண்

1 mins read
805b8ea4-ff64-4be0-9fe7-4e0d19db4877
சம்பவம் செந்தில் (இடது), ஆம்ஸ்ட்ராங். - கோப்புப்படங்கள்: ஊடகம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய சம்பவம் செந்திலை காவல்துறை விரைவில் கைது செய்யும் என சென்னை காவல்துறை ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரவுடிகளை ஒழித்துக்கட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கையால், பல ரவுடிகள் சென்னையை விட்டு ஓடிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பவம் செந்திலுக்கு தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. அவர் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.

“அவரை விரைவில் கைது செய்வோம். இந்த வழக்கில் காவல்துறை அடுத்த வாரம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும்,” என்றார் ஆணையர் அருண்.

இணைக் குற்றங்களில் ஈடுபடுவோர் ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநிலங்களில் இருந்துதான் அதிகம் செயல்படுவது தெரிய வந்துள்ளது என்றும் கம்போடியா நாட்டில் இருந்துதான் இணைய மோசடிக்காரர்கள் அதிக அளவில் செயல்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரவுடிகள் பட்டியலில் உள்ள செந்தில்தான் மற்ற ரவுடிகளுடன் இணைந்து, ஆம்ஸ்ட்ராங் கொலைத் திட்டத்தை ஒருங்கிணைத்தார் என்று காவல்துறை கூறுகிறது.

இதையடுத்து, அவரைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்