தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி கைது

1 mins read
5b681850-81e9-4936-9a19-107534ce679d
கைது செய்யப்பட்ட பாஜக ஓபிசி அணிச் செயலாளர் விஜயகுமார். - படம்: ஊடகம்

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவிலைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பாஜக ஓபிசி அணிச் செயலாளர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பெண் காவலர். இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் விஜயகுமார், அந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கைப்பேசியில் ஆபாசமாக படங்கள், செய்திகள் அனுப்பி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

விஜயகுமாரை, அந்தப் பெண் காவலர் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும் விஜயகுமார் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகார் அளித்ததையடுத்து, வழக்குப்பதிவு செய்து, கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணிச் செயலாளர் விஜயகுமாரை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

குறிப்புச் சொற்கள்