தமிழகத்தில் அமெரிக்கா உதவியுடன் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு

1 mins read
24ca5bbb-3408-44c5-b563-065d88dda5ed
சிகாக்கோவில் பிஎன்ஒய் (BNY) மெலன் வங்கியின் உயர் அலுவலர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, சிகாக்கோ நகரில் பிஎன்ஒய் மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கிச் சேவைகளில் அறிமுகம் செய்யும் திட்டம் குறித்து பிஎன்ஒய் மேலன் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பிஎன்ஒய் மெலன் வங்கி தனது ஆறு முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகளவு கணினி பொறியியல் படித்த மாணவர்கள் உள்ளதால், அமெரிக்காவின் உதவியுடன் சென்னையில் அனைத்துலகத் தரத்தில் பயிற்சி மையம் அமைக்கவும் தரவுகளை பகுப்பாய்வு செய்யவும், மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்