மார்ச் 19ல் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

மார்ச் 19ல் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

1 mins read
22b6619c-a53f-495c-a33e-f6b6fba47b40
சென்னையில் ஆட்டோக்கள். - மாதிரிப் படம்: தி இந்து / இணையம்
Google News Preferred Icon

சென்னை: தமிழகத் தலைநர் சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் வரும் புதன்கிழமை (மார்ச் 19) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மாலை மலர் போன்ற தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து சென்னை-செங்கல்பட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றியத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்டோ சங்கங்கள் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையைக் கட்டண நிர்ணயக்குழு ஏற்றுக்கொண்டு கடந்த 2022ஆம் ஆண்டு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ. 50உம் அடுத்தடுத்த கிலோ மீட்டருக்கு ரூ. 25உம் நிர்ணயித்துப் பரிந்துரை வழங்கியது. ஆனால், ஓலா, ஊபர் செயலி நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன. “இந்த நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி உடனடியாக ஆணையிடவும், அரசே ஒரு ஆட்டோ செயலியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி வருகிற 19ஆம் தேதி ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்