பைக் டாக்சியை தடை செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

1 mins read
a9ad7683-e484-4cbd-a475-9de255a91c79
தமிழ் நாட்டில் பைக் டாக்சிகளைத் தடை செய்யக்கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் வியாழக்கிழமை (டிசம்பர் 19) போராட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: ஊடகம்

சென்னை: மோட்டார் ‘பைக் டாக்சி’யைத் தடை செய்யக் கோரியும் ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தியும் ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘பைக் டாக்சி’யைத் தடை செய்யக்கோரியும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தர வலியுறுத்தியும் பைக் டாக்சி விவகாரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பேசியதைக் கண்டித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள லேன்ஸ் கார்டன் சாலையில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்