ரூ.150 கோடியில் தானியக்கமுறையில் ரயில் பயணச்சீட்டு வழங்கும் ஏற்பாடு

1 mins read
04280218-9fb8-4ae4-9e62-3df73f53dd41
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிதாக கட்டப்படும் ரயில் நிலையங்களில் தானியக்க முறையில் பயணச்சீட்டு வழங்கும் வாசல்களை அமைக்கத் திட்டமிட்டு உள்ளது. - படம்: தினத்தந்தி

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்டமாக 118 கி.மீ. நீளத்திற்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான பணி நடைபெற்று வருகிறது.

இதன்கீழ் கட்டப்படும் புதிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தானியக்கமுறையில் பயணச்சீட்டு வழங்கும் வாசல்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கு ரூ.150 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையைக் கடனாகப் பெற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இரண்டாம் கட்டத் திட்டத்துக்கு மொத்தம் ரூ.61,843 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதில், மாநில அரசு நிதி தவிர, ஜப்பானிய அனைத்துலக ஒத்துழைப்பு நிறுவனம் ரூ.20,196 கோடியை வழங்குகிறது.

மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி போன்ற வங்கிகளும் நிதி உதவி செய்யவிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்