தமிழகக் கோயில்களில் கைப்பேசி எடுத்துச் செல்ல தடை நீக்கம்

தமிழகக் கோயில்களில் கைப்பேசி எடுத்துச் செல்ல தடை நீக்கம்

கோப்புப் படம்: மாலைமலர்

13 Oct 2026 - 8:04 pm

1 mins read

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளுடன் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

புதிய விதிமுறையின்படி, கோயிலுக்குள் கைப்பேசியை எடுத்துச் செல்லலாம். ஆனால், கோயிலுக்குள் இருக்கும்வரை கைப்பேசியைக் கண்டிப்பாக அடைத்து வைத்திருக்க வேண்டும்.

கோயிலுக்குள் சிலைகள், பூசைகளைப் புகைப்படம், காணொளி, செல்ஃபி எடுப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.

விதிமுறையை மீறி ரகசியமாகப் புகைப்படம் அல்லது காணொளி எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 52 முக்கியக் கோயில்களுக்குள் கைப்பேசியை எடுத்துச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டது. அவற்றைக் கட்டண வைப்பறைகளில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததாலும், அவசரத் தேவைகளுக்குத் தொடர்புகொள்ள முடியாததாலும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அதுகுறித்து பலரும் அளித்த புகார்கள், கருத்துகளின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை தற்போது புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்