சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறையினர் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏற்கெனவே ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வியாழக்கிழமையன்று மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய மூவரிடமும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் தலைமறைவாக உள்ள செந்திலின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. இவர்களில் வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. விசாரணை தொடர்கிறது.