தமிழிசைக்கு முக்கியப் பொறுப்பு வழங்கிய பாஜக

1 mins read
a0e29b4b-26b7-4fa4-97c4-9a4476b3a9d3
தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

சென்னை: தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்வதற்கான குழுக்களை நியமித்து வருகின்றன.

அவ்வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குழு அமைத்துள்ளார்.

அதன்படி கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் தேசியப் பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவின் முக்கிய உறுப்பினர்களாக மாநிலத் துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், பி.கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் இராம. ஸ்ரீநிவாசன், கார்த்தியாயினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2026 தேர்தலுக்கான மக்கள் நலன் சார்ந்த முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையைத் தயார்செய்யும் பணிகளை அந்தக் குழு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்