திமுக அரசைக் கண்டித்து மதுரையில் இருந்து சென்னைக்கு பாஜக மகளிரணி நீதிப்பேரணி: அண்ணாமலை அறிவிப்பு

1 mins read
15572b30-3517-4339-9b25-a5d29d57d7a5
அண்ணாமலை. - படம்: ஊடகம்

சென்னை: டிசம்பர் 3ஆம் தேதியான நாளை மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதிப் பேரணி நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து இந்தப் பேரணி நடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பேரணியின் முடிவில் பாஜக மகளிர் அணி சார்பில் தமிழக ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றும் தமது பதிவில் தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரத்தில் குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதைக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஏற்கெனவே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்து திமுக அரசுக்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

டிசம்பர் 30ஆம தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தவெக தலைவர் நடிகர் விஜய், தமிழக ஆளுநரைச் சந்தித்து மனு வழங்கினார்.

டிசம்பர் 31ஆம் தேதி நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்