பழனி: உலக நலனுக்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பழனி ஆன்மிகத் தலத்தில் பால்குடம் எடுத்துச் சென்றனர்.
பழனியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் யாகம் நடத்திய அவர்கள் பின்னர், அருகே உள்ள திருஆவினன்குடி கோவிலுக்குப் பால் குடம் எடுத்துச் சென்றனர்.
அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையை அவர்கள் அணிந்திருந்தனர். மேலும் சிலர் தங்கள் கைகளில் ஒரு வேலும் வைத்திருந்தனர்.
ஜப்பான் பக்தர்களைக் கண்டதும் உள்ளூர் பக்தர்கள் சிலரும் பரவசமடைந்து, பால்குடம் ஏந்திச் சென்றவர்களைப் பின்தொடர்ந்தனர்.
ஜப்பானில் இருந்து பலர் குழுவாக வந்து இந்தியாவில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் இடங்களில் எல்லாம் உலக அமைதிக்காக யாகங்களும் நடத்தி வருகின்றனர்.