தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

படம்: தமிழக ஊடகம்

19 Aug 2024 - 5:55 pm

1 mins read

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், விசைப்படகுகளுக்குத் தேவையான ஐஸ் கட்டிகளை வழங்கும் நிறுவனத்தினர் மின்கட்டண உயர்வு காரணமாக, ஐஸ் கட்டிகளுக்கு விலையேற்றம் செய்தனராம்.

இதனால், நீள் ஐஸ்கட்டி ஒன்றுக்கு ரூ.10 விலை உயர்வு செய்யப்பட்டதாம். இந்த விலையேற்றத்தை ஏற்க மறுத்த விசைப்படகு உரிமையாளர்கள், விலை உயர்வைக் கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், வழக்கமாக செல்லவேண்டிய சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

இதன் காரணமாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்