நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
a65b4376-d6e9-4262-957b-0fdb93104929
திரிஷா. - கோப்புப் படம்: டெக்கான் குரோனிக்கல்

சென்னை: நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக சென்னை மட்டுமின்றி, நாடு முழுவதும் பள்ளிகள், விமான நிலையங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், முக்கியப் பிரமுகர்களும் இத்தகைய மிரட்டல்களுக்கு ஆளாகின்றனர்.

அண்மையில் நடிகர்கள் தனுஷ், ரஜினி ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், நடிகை திரிஷாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

சென்னையில் உள்ள தமிழக காவல்துறை தலைவர் அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில், நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, காவல்துறையினர் வெடிகுண்டுகளைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், பல மணிநேரச் சோதனைக்குப் பிறகு சந்தேகத்துக்குரிய எந்தப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்றும் தெரியவந்தது.

இதுதொடர்பாக தமிழக இணையக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்