தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல்வர் ஸ்டாலின், விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 mins read
7b1d7f9e-3c55-4bec-b964-b6872274f298
தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் வசித்து வருகிறார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகியோர் வீடுகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்துள்ளது.

மிரட்டல் விடுத்தவர் குறித்து தீவிர வீசாரணை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள சித்தரஞ்சன் சாலையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அங்குள்ள அவரது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 27) அதிகாலை மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய ஓர் ஆடவர், முதல்வர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, முதல்வர் வீட்டில் பணியில் இருந்த காவல்துறையினரும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடனும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. எனவே, இந்த மிரட்டல் வெறும் புரளி எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் குன்றியிருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு காவல்துறை வலைவீசியுள்ளது.

இதனிடையே, தவெக தலைவர் விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விஜய் வீட்டுக்கும் சென்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. ஆகவே இந்த மிரட்டலும் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையின் முக்கியமான இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்