சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகை திரிஷா, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரின் வீடுகளுக்கும் தமிழக பாஜக தலைமையகத்துக்கும் மின்னஞ்சல் வாயிலாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்தனர். தீவிர சோதனைக்குப் பிறகு அந்த மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைய சில மாதங்களாகத் தமிழக அரசின் தலைமைச் செயலகம், சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களுக்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு, பின்னர் அது வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.
டெல்லியில் அண்மையில் ஒரே நாளில் 300 பள்ளிகளுக்கு இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டது.