நாமக்கல்: திருமண நாளன்று, மணக்கோலத்துடன் பல மணமக்கள் வாக்களித்துள்ளனர்.
நாமக்கல் வ.உ.சி நகரைச் சேர்ந்த தீபிகாவுக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஆனந்த்துக்கும் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) காலை நாமக்கல்லில் திருமணம் நடைபெற்றது.
தாலி கட்டும் நிகழ்வு முடிவடைந்ததும், திருமணக் கோலத்தில் சென்று வாக்களித்த தீபிகா, “மாலை கணவர் வீட்டிற்கு (திருப்பூர்) செல்ல வேண்டும். அதனால், கிளம்புவதற்கு முன்பே வாக்களிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்று தெரிவித்தார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த சித்தநாதன் - விஷாலி, ஜெயவீரகார்த்தி - சிவசங்கரி தம்பதிகள் திருமணம் முடிந்தபின் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குப் பதிவு செய்தனர். சித்தநாதன் - சிவசங்கரி இருவரும் அண்ணன் - தங்கை, அதேபோன்று, ஜெயவீரகார்த்தி- விஷாலி இருவரும் அண்ணன் - தங்கை.

