தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வரவுசெலவுத் திட்ட உரை குறித்து திமுக விமர்சனம்

தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லை

2 mins read
ccf0756b-c083-4d4e-918d-dbca3bc22de8
தமிழக எம்பி தயாநிதி மாறன். - படம்: தமிழக ஊடகம்

புதுடெல்லி: வரவுசெலவுத் திட்ட உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை என்று தமிழக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

“மிகவும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட். பிப்ரவரி 5 நடைபெறவுள்ள டெல்லி தேர்தலுக்காகத் திட்டமிடப்பட்ட பட்ஜெட்போல் தெரிகிறது. பீகார் தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மாநிலத்துக்கு மட்டும் உள்கட்டமைப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அல்லது வேறெந்த தென் மாநிலங்கள் குறித்தும் ஒரு வார்த்தைகூட உரையில் இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

“ரூ. 12 லட்சம் வருமானம் வரை வரி இல்லை என்று நிதியமைச்சர் அறிவித்தார். பின்னர், 8 -12 லட்சம் வரை 10 விழுக்காடு வரி வரம்பு எனத் தெரிவித்துள்ளார். இது, மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிமையானதாகவும் நேரடியாகவும் அறிவிப்பை வெளியிடவில்லை,” என்றார் அவர்.

“என்னுடைய அனுபவத்தில் முதல்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது,” என்று திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்தார்.

மத்திய வரவுசெலவுத்தில் பல மாநிலங்களின் பெயர் கூட இடம்பெறாத நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பீகாருக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பொருளிணல் அனைத்து முக்கிய பொருளியல்களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. அனைத்து மாநிலங்களின் சீரான வளர்ச்சிக்கு அடுத்த 5 ஆண்டுகளை ஒரு தனித்துவமான வாய்ப்பாகப் பார்க்கிறோம் என்று உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்ற மாநிலங்களைவிட இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பீகாருக்கு அதிக திட்டங்களை அறிவித்தார். இது எதிர்கட்சிகளின் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்