சிவகங்கை: பழமலைநகரில் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தங்களது குல தெய்வங்களான காளியம்மன், மீனாட்சியம்மன், மாரியம்மன், மதுரை வீரனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதற்காக நரிக்குறவர்கள் தங்களது குடியிருப்புப் பகுதியில் சாமி கும்பிடுவதற்கான ஓலைக் குடில்களை அமைத்து வழிபாடு நடத்தினர். வழிபாட்டுச் சடங்கின் ஓர் அங்கமாக காளியம்மனுக்கு 21 எருமைகள் மற்றம் 120 ஆடுகளை அவர்கள் பலியிட்டனர்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மாலையில் பெண்களின் மது எடுப்பு ஊர்வலமும், நள்ளிரவில் எரிசோறு விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

