காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஏப்ரல் 19) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் கைவினைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஏறக்குறைய 8,951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் ஆணைகளையும் அவர் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் 7.29 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பேராவூரணி கயிறு குழுமம், ராமநாதபுரம் மாவட்டம், வசந்த நகரில் 6.72 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள நகை உற்பத்திக்குழுமம், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நகரில் 1.15 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மகளிர் எம்ப்ராய்டரிங் குழுமம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.