தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருச்சியில் ரயில் பெட்டிகள் கழன்று ஓடியதால் பரபரப்பு

1 mins read
bab458e2-8fb6-4928-bb9d-7f1183b2bca6
திருச்சியிலிருந்து சென்னைக்குப் புறப்படவிருந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் கழன்று ஓடியதால் ரயிலில் இருந்த பயணிகள், ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்வரை காத்திருந்தனர். - படம்: ஊடகம்

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட பயணிகள் ரயிலிலிருந்து மூன்று பெட்டிகள் மட்டும் தனியாகக் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதன்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு, சேது எக்ஸ்பிரஸ் ரயில் ராமேசுவரத்திலிருந்து திருச்சிக்குப் புறப்பட்டது.

ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக இந்த ரயில் நள்ளிரவு 1 மணிக்கு, திருச்சி சென்று சேர்ந்தது.

திருச்சியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு 1.40 மணிக்கு, சென்னைக்குப் புறப்பட்டது. ரயில் சுமார் நூறு மீட்டர் தூரம் சென்ற நிலையில், ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் மட்டும் தனியாகக் கழன்று சிறிது தூரம் ரயிலைத் தொடர்ந்து ஓடிய பின்னர் நின்றன.

இந்தச் சம்பவத்தை அறிந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதைக் கண்ட ரயில்வே ஊழியர்கள், உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதையடுத்து அந்த ரயில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது.

இந்தச் சம்பவத்தால் பயணிகள் எவரும் காயமடையவில்லை. இருப்பினும், இதுகுறித்து சென்னை பராமரிப்புப் பணிமனையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்