மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற அமைச்சரவை ஒப்புதல்

மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற அமைச்சரவை ஒப்புதல்

படம்: இந்து தமிழ் திசை

24 Nov 2026 - 4:21 pm

2 mins read

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்றுவதற்கான தீர்மானம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். இந்த முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டிசம்பர் 4 முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை மேற்கு வங்க சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும். அதில் டிசம்பர் 9ஆம் தேதி பெயர் மாற்றத் தீர்மானம் தாக்கல் செய்யப்படும்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் நாடாளுமன்ற நடைமுறைகளுக்குப் பிறகு, அதிகாரபூர்வ ஆவணங்களில் ஆங்கிலத்திலும் ‘பச்சிம் பங்கா’ என்றே மாற்றப்படும்.

வங்க மொழியில் உச்சரிப்பதைப் போலவே ஆங்கிலத்திலும் பெயரை அமைக்கும் முடிவு 1947ஆம் ஆண்டு மாநில உருவாக்கத்துடன் தொடர்புடைய வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஆங்கில அகர வரிசையில் மாநிலத்தின் பெயர் கடைசி எழுத்தில் தொடங்குவதால் தேசிய அளவிலான கூட்டங்களில் கடைசியாகப் பேசும் வாய்ப்பு கிடைக்கும் சிக்கலைக் குறைக்கவும் இது உதவும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு இடது முன்னணி, திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக் காலங்களிலும் 2011ஆம் ஆண்டில் ‘பச்சிம் பங்கா’ அல்லது ‘பச்சிம் பங்கோ’ என்றும், 2018ஆம் ஆண்டில் ‘பங்களா’ என்றும் பெயர் மாற்ற முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் அவை நிலுவையில் இருந்தன.

இப்போது மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதால் ஒப்புதல் பெறுவதில் சிக்கல்கள் குறையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்