கார் மோதல்: பாதயாத்திரை சென்ற 4 பெண் பக்தர்கள் பலி

கார் மோதல்: பாதயாத்திரை சென்ற 4 பெண் பக்தர்கள் பலி

1 mins read
74a5a678-50a3-4a05-b083-a911b3518a1b
பாதயாத்திரை சென்ற பெண்களின் கூட்டத்துக்குள் புகுந்து விபத்து ஏற்படுத்திய கார். - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

பெரம்பலூர்: பாதயாத்திரை சென்ற பெண் பக்தர்கள் மீது கார் மோதியதில் நால்வர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே சனிக்கிழமை (ஜனவரி 31) அந்த விபத்து நிகழ்ந்தது.

காலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சாலையில் நடந்து சென்றனர்.

அப்போது சென்னையில் இருந்து திருச்சி வழியாகச் சென்ற கார் ஒன்று அந்த பக்தர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பக்தர்கள் உயிரிழந்தனர். விபத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவரும் சேலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய சென்னை திருசூலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான கவுதம், 24, என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, விபத்தில் இறந்தவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டுள்ளது.

எஸ். மலர்க்கொடி, 35, பி. விஜயலெட்சுமி, 47, சசிகலா, 47, எம். சித்ரா, 40 ஆகியோர் அவர்கள்.

இறந்தவர்கள் தவிர, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்