தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பா: அன்புமணி கேள்வி

1 mins read
f0af6450-6d1a-44b1-a84e-a92c247be541
அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருப்பதை, ஏமாற்று வேலை என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் திமுக ஆட்சியில் அரசுத் துறைகளில் 68,000 பேருக்கும் தனியார் நிறுவனங்களில் ஐந்து லட்சம் பேருக்கும் வேலை வழங்கப்பட்டதாகவும் அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மின்கட்டண உயர்வின் சுமையைத் தாங்க முடியாமல் சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், இது எவ்வாறு சாத்தியமாகும் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலை வாய்ப்பு பெற்ற ஐந்து லட்சம் பேரும் தமிழர்களா, இந்தப் புதிய வேலை வாய்ப்புகள் எங்கு, எப்போது ஏற்படுத்தப்பட்டன, இதில் தமிழக அரசின் பங்களிப்பு என்ன என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கோவை மண்டலத்தில் செயல்பட்டு வந்த பல நிறுவனங்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதுதான் தமிழகத்தின் உண்மை நிலை என்றும் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்