சென்னை: ஜாஃபர் சாதிக் மீதான சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக, திரைப்பட இயக்குநர் அமீர் உட்பட 12 பேருக்கு அழைப்பாணை அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 26ஆம் தேதியன்று அமலாக்கத்துறையால் ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.
மேலும் ஜாஃபர் சாதிக், அவரது சகோதரர், மனைவி, இயக்குநர் அமீர் உள்பட 12 பேருக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்குவதற்காக நவம்பர் 11ஆம் தேதிக்குள் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி.