தமிழகத்தின் அன்றாட மின்தேவை 23,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையம் மதிப்பீடு

1 mins read
d0fb5f5d-a628-447c-929f-af70c95305a1
கூடுதல் மின்வழித் தடங்களை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக மின் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  - சித்திரிப்புப் படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தின் மின்தேவை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையம் கணித்துள்ளது.

தற்போது தமிழகத்தின் அன்றாட மின்தேவை 15,000 மெகாவாட்டாக உள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 2026-27ஆம் ஆண்டு, மின் தேவையானது 23,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் என மத்திய மின்சார ஆணையத்தின் அண்மைய மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏராளமான எண்ணிக்கையில் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.

எனவே, தேவைக்கேற்ப மின் விநியோகம் செய்வதற்கு கூடுதல் மின்வழித் தடங்களை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக மின் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், அன்றாட மின் தேவை 8,190 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. எனவே, சூரியசக்தி, காற்றாலை மின்சாரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்