சென்னை: தமிழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது காலை உணவுத்திட்டத்தில் பொங்கல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அவற்றில் பள்ளி மாணவர்களுக்கான உணவுத் திட்டமும் அடங்கும்.
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும்.
மேலும், தமிழக பள்ளிகளில் சத்துணவு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியத்தொகை ரூ.61.61 கோடியாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.