சென்னை: முன்னாள் தி.மு.க நிர்வாகியான ஜாபர் சாதிக், 37, மீது பல்வேறு போதைப்பொருள் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல திரைப்பட இயக்குநர் அமீர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தில் அமீரும் பலனடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜாபர் சாதிக் மீது 2010ம் ஆண்டு தொடரப்பட்ட திருட்டு வி.சி.டி (VCD) விற்றதன் தொடர்பிலான வழக்கு விசாரணை, பூந்தமல்லி நீதிமன்றம் ஒன்றில் நடந்து வந்தது. வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

