தமிழகத்தில் அதிக பயணிகளைக் கையாளும் சென்னை விமான நிலையம்

தமிழகத்தில் அதிக பயணிகளைக் கையாளும் சென்னை விமான நிலையம்

படம்: சிஏசி

09 May 2026 - 1:40 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் அதிகப் பயணிகளைக் கையாளும் விமான நிலையமாக சென்னை விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தை 2025 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையில் ஏறத்தாழ 2 கோடியே 30 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இது அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2.7 விழுக்காடு அதிகம்.

சென்னை உள்நாட்டு, அனைத்துலக விமான சேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது இந்த வளா்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இரண்டாவது இடத்தில் உள்ள கோவை விமான நிலையத்தை 322,000 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 5.2% அதிகமாகும்.

மூன்றாவது இடத்தில், 222,000 பயணிகளுடன் திருச்சி அனைத்துலக விமான நிலையம் உள்ளது. தென்கிழக்காசிய நாடுகளுக்கான சேவைகள் இந்த விமான நிலையத்திலிருந்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த இடங்களில் மதுரை, தூத்துக்குடி, சேலம் விமான நிலையங்கள் உள்ளன.

மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு, அனைத்துலக விமான இணைப்பு சேவைகள் அதிகரித்திருப்பதால் விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுசென்னைவிமான நிலையம்முதலிடம்தமிழகம்