‘சென்னை தினம்’; அரசியல் தலைவர்கள் வாழ்த்து

‘சென்னை தினம்’; அரசியல் தலைவர்கள் வாழ்த்து

1 mins read
6cf7142b-9b08-40e4-a8e8-a054d9dafec8
சென்னை ‘385’ வயதை எட்டியிருக்கும் சூழலில் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 22ஆம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்படுகிறது. சென்னை ‘385’ வயதை எட்டியிருக்கும் சூழலில் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் சென்னைக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

“சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை. இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம். பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!” என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சென்னையை இந்தியாவின் முதன்மை நகரமாக மாற்ற அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

“சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்ட தினத்தை குறிக்கும் வகையில் 385-ஆம் சென்னை நாளைக் கொண்டாடும் சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மண் பாட்டாளிகளின் மண். பூர்வகுடி மக்களின் மண். அவர்களின் உழைப்பு தான் சென்னையை இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்த மாநகரமாக மாற்றியிருக்கிறது. இந்தியாவின் முதன்மை நகரமாக மாற்ற வேண்டும். அதற்காகக் கடுமையாக உழைக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்,” என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் போல் பல தமிழக அரசியல் தலைவர்களும் சமூக ஊடகம் வழி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்